ரீமிக்ஸ் பாடல்கள் எரிச்சலூட்டுகின்றது ... ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் !

புதன், 19 பிப்ரவரி 2020 (19:52 IST)
ரீமிக்ஸ் பாடல்கள் எரிச்சலூட்டுகின்றது ... ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் !

இந்திய இசையின் அடையாளமாகப் பார்க்கப்படுபவர்   ஏ.ஆர்.ரஹ்மான்.  இவரது இசையமைப்பில் வெளியாகும் பாடல்கள் யாவும் உலக அளவில் பிரபலமாகிவிடும். இந்நிலையில், ரீமிக்ஸ் பாடல்கள் மிகவும் மோசமாகவும் எரிச்சலூட்டுவதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
 
தனது பாடல்கள் ரீமிக்ஸ் செய்யப்படுவது குறித்து அவர் கூறியதாவது :
 
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஓகே ஜானு என்ற படத்தில் ஹம்மா ஹம்மா என்ற ரீமிக்ஸ் பாடல் பிடித்திருந்தது. ஆனால் அதன் பிறகு வெளியான பாடல்கள்  எனக்குப் பிடிக்கவில்லை; அவை எனக்கு எரிச்சலூட்டுவதாக உள்ளது என தெரிவித்திருந்தார். மேலும் ரிமிக்ஸ் டிரெண்ட் இப்போது முடிந்துவிட்டது என தெரிவித்தார்.

எஸ்.ஜே.சூர்யாவின் ’நியூ’ என்ற படத்தில் ரஹ்மான் ’தொட்டால் பூ மலரும்’ என்ற எம்.எஸ்.விஸ்வநாதன் பாடலை உபயோகித்திருந்தார்.
 
சமீபத்தில் இளம் இசையமைப்பாளர்கள் பலர் ரீமிக்ஸ் பாடல்களுக்கு இசையமைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்