ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’. ரகுல் ப்ரீத் சிங், மகேஷ் பாபு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகியுள்ளது. மகேஷ் பாபுவுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க, பரத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 27ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் டீஸர் நாளை (ஆகஸ்ட் 9) காலை 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மகேஷ் பாபு ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.