அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட ஷங்கரின் கேம் சேஞ்சர்… புது ரிலீஸ் தேதி இதுதான்!

vinoth

ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (09:49 IST)
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராம்சரண். சமீபத்தில் இவர் நடித்து வெளியான RRR திரைப்படம் உலக அளவில் பிரபலமான நிலையில், ராம்சரணின் அடுத்த படமான கேம்சேஞ்சர் படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்.

இந்த படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது. ஆனால் இதுவரை ஒரு பாடலைத் தவிர வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. படம் கிறிஸ்துமஸ்ஸுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதுபற்றியும் அதிகாரப்பூர்வ தேதி எதுவும் வெளியாகவில்லை. இதனால் கடுப்பான ராம்சரண் ரசிகர்கள் கேம் சேஞ்சர் படக்குழுவைக் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 10 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shankar Shanmugham (@shanmughamshankar)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்