நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மெகாஹிட் ஆனது. அதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாகம் பிப்ரவரி 7 வெளியாகி கலவையான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றது. சந்தானம் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதன் பின்னர் அவருக்குக் கைகொடுத்த ஒரு சில படங்களில் தில்லுக்கு துட்டு படமும் ஒன்றாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இதன் அடுத்த பாகமான 'தில்லுக்கு துட்டு 3'-ஐ 3டியில் எடுக்க நடிகர் சந்தானம் முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த படத்தை முதல் இரண்டு பாகங்களை இயக்கிய ராம்பாலா இயக்கவில்லை. அவருக்கு பதிலாக ராம்பாலாவின் இணை இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குனர் ராம் பாலாவுக்கும் சந்தானத்துக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடுதான் இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது.