ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிப்பில் உருவான கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தில் ராஜூ தயாரித்து சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் கேம்சேஞ்சர் படத்தைக் கலாய்த்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா பதிவிட்டுள்ளார். அதில் “கேம்சேஞ்சர் படத்தின் பட்ஜெட் 450 கோடி என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் சிறப்பான விஷுவல் அனுபவம் தந்த ஆர் ஆர் ஆர் படத்தின் பட்ஜெட்டை 4500 கோடி ரூபாய் என சொல்லலாம். அதே போல கேம்சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் 1860 கோடி ரூபாய் என்று சொன்னால் புஷ்பா 2 வசூல் 1860 கோடி ரூபாயாக இருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.