ரஜினி பேசிய அதிரடி பஞ்ச்...எகிறிய கிளாப்ஸ்...

சனி, 3 நவம்பர் 2018 (15:38 IST)
இந்தியாவில் உள்ள  வல்லபாய்  படேல் சிலை தான் உலகின் பிரமாண்ட சிலைஎன்றால் .இந்திய சினிமாவின் பிரமாண்டம் ஷங்கரின் திரைப்படம் தான். தற்போது இவர் இயக்கத்தில் ரஜினி,அக்‌ஷய் குமார்,எமி ஜாக்சன்,போன்றோர் நடிப்பில் கூடிய விரைவில் திரைக்கு வரவிக்கும் படம் 2.0. கடந்த 2010 ஆம் ஆண்டில் பெரும் வரவேற்பை பெற்ற எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக இத்திரைப்படம் தயாராகி இருக்கிறது. சன்பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது.
இன்று இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது பேசிய ரஜினி லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும் என்று பேசினார்.இந்தப் படத்துடன் தன் அரசியல்,வருகையும்  மையப்படுத்திதான் இப்படி பேசியிருக்கிறார் என தெரிகிறது. ரஜினி இப்படி பேசியதும் அவரது ரசிகர்களிடமிருந்து 
விசில் மற்றும் கைதட்டல் அரங்கை அதிரவைத்தது.
 
மேலும் பேசிய ரஜினி இந்தப், படம் மிகப் பெரிய வெற்றிப் படமால்க அமையும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்