ஆக்ஸன் கிங் அர்ஜூன் மீது நடிகை பாலியல் புகார்...

சனி, 20 அக்டோபர் 2018 (14:59 IST)
அண்மைக்காலமாக பல்வேறு துறைகளில் இருக்கும் பிரபலமானவர்களின் மீது பாலியல் புகார் வருவது அதிகரித்து வருகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக மீ டூ இயக்கமும் இணையதளம் வாயிலாக செயல்பட்டு வருகிறது.
 
இதன் தொடர்ச்சிதான் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியிந்தார். அதனையடுத்து நடிகர் ராதாரவி மீதும் ஒரு இணையதள பத்திரிக்கையாளர் குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்நிலையில் ஆக்ஸன் கிங் என்று தமிழர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜூன் மீது பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் என்பவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.
 
நடிகர் அர்ஜூனுடன் 'விஸ்மயா' என்ற திரப்படத்தில் நடித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி தெரிவித்திருக்கிறார். இந்த புகார் பற்றி அர்ஜீன் தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்