கூலி படத்துக்கு போட்டி போடும் முன்னணி நிறுவனங்கள்… இத்தனை கோடி ரூபாய் ஆஃபரா?

vinoth

வியாழன், 10 அக்டோபர் 2024 (10:12 IST)
கடந்த 30 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்தில் இருந்து செல்லு தமனியில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கத்தீட்டர் சிகிச்சை மூலமாக ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவனையில் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அந்த சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஐசியுவில் சிகிச்சை அறைக்கு அவர் மாற்றப்பட்டு விட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது அவர் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இதையடுத்து கூலி பட ஷூட்டிங் மீண்டும் இம்மாத மத்தியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் 175 கோடி ரூபாய் வரை இந்த படத்துக்குத் தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனவாம். ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் 200 கோடி ரூபாய் என்று சொல்லி பேரம் பேச தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்