சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் பல கோடி ரூபாய் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் குஷ்பூ மீனா நயன்தாரா கீர்த்தி சுரேஷ் பிரகாஷ்ராஜ் சூரி உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஆகியோரின் பாடல் காட்சிகள் சென்னையில் நடைபெற்றது. சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் இப்பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.