கொரோனா வைரஸ் தடுப்பு நிதி: ரூ. 3 கோடி அளித்த ராகவா லாரன்ஸ்

வியாழன், 9 ஏப்ரல் 2020 (18:20 IST)
கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக திரையுலக பிரபலங்கள் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே. சமீபத்தில்கூட தல அஜித் ரூபாய் 1.25 கோடி நிதி வழங்கினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் ரூபாய் மூன்று கோடி கொரோனா வைரஸ் தடுப்பு நிவாரண நிதியாக ஒதுக்கியுள்ளார். இந்த 3 கோடியில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சமும், பெப்ஸி அமைப்புக்கு ரூபாய் 50 லட்சமும், நடன இயக்குனர் சங்கத்திற்கு ரூபாய் 50 லட்சமும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூபாய் 25 லட்சமும், தான் பிறந்து வளர்ந்த பகுதியான ராயபுரம் பகுதியில் தினக்கூலி செய்யும் பணியாளர்களுக்கு ரூபாய் 75 லட்சமும் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார் 
 
மேலும் இந்த ரூ.3 கோடி பணம் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’சந்திரமுகி 2’ படத்தில் நடிக்க தனக்கு கிடைத்த சம்பளம் என்றும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்