ராகவா லாரன்ஸின் ‘சந்திரமுகி 2’: அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட ரிலீஸ் தேதி..!

வியாழன், 29 ஜூன் 2023 (17:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான ‘சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில் சமீபத்தில் இந்த படப்பிடிப்பு முடிவடைந்தது. 
 
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத்,  லட்சுமிமேனன் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில்  வெளியாக இருப்பதாகவும் தெரிவித்து போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளனர். செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் செப்டம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்த படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்