கருணாஸ், வடிவேலு, சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்கள் பல படங்களில் நாயகனாக நடித்தனர். சந்தானம் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். ஆனால், விவேக்கிற்கு நாயகன் வேடம் தள்ளிக்கொண்டே போய் கடைசியில் நான்தான் பாலா என்ற படத்தில் நடித்தார். படம் எதிர்பார்த்தது போல் போகவில்லை.
இதில் விவேக் நடிகராகவும், அவரது ரசிகராக அருள்நிதியும் நடித்துள்ளனர். நடிகர் - ரசிகன் உறவைச் சொல்கிற படம் இது. இதன் மற்றொரு விசேஷம் ராதாமோகனின் மொழியில் ஜோதிகா காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தல் நடித்தது போன்றே, அருள்நிதியும் காது கேட்காத வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.