திருச்சி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட ஸ்பாக்கள் இயங்கி வருகின்றன. அதில், ஸ்பா,மசாஜ்,. ஸ்டிரீமிங் ஆகியவவை நடந்து வருவதாகவும், இதில், சிலவற்றில் பாலியல் தொழில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற விபச்சார தடுப்பு பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் கருணாகரன் ஸ்பா சென்டரில், அங்கிருந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். சில பெண்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், அங்கு, உரிய அனுமதியின்றி பல ஆண்டுகளாக ஸ்பா இயங்கி வருவதுடன், பாலியல் தொழில் நடந்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 2 பெண்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.மேலாளர் பெண்ணை கைது செய்தனர். இந்த ஸ்பா வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்திலுக்கு சொந்தமானதும், அவர் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மத்திய பகுதி நிர்வாகி என்ற தகவல் வெளியானது.
இந்த நிலையில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். புதுச்சேரியில் அவர் இருப்பது போலீஸாருக்கு தெரியவந்ததை அடுத்து, பல நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியில் இன்று அவரை போலீஸாரால் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்தபோது, சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்ததாக கூறியுள்ளார்.