தியேட்டரை நம்பி யூஸ் இல்ல.. ஓடிடி பக்கம் தாவும் படங்கள்!

திங்கள், 30 நவம்பர் 2020 (10:45 IST)
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள் திறக்கப்பட்டும் திரைப்படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லாததால் பல படங்கள் ஓடிடிக்கு விற்க தயாரிப்பாளர்கள் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் கடந்த மார்ச் மாதம் முதலாக மூடப்பட்டிருந்த நிலையில் இந்த மாதம் திறக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளிக்காக பிஸ்கோத், இரண்டாம் குத்து உள்ளிட்ட படங்களும் வெளியாகின. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளுக்கு கூட்டம் வரவில்லை. அதேசமயம் ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன், சூரரை போற்று போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

தற்போதைய சூழலில் சிறிய படங்களை வெளியிடவும் திரையரங்க உரிமையாளர்கள் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. இதனால் தமிழில் உருவான சுமார் 18 சிறிய பட்ஜெட் படங்களை ஓடிடிக்கு விற்றுவிட தயாரிப்பாளர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாரீஸ் பாரீஸ், கர்ஜனை, சர்வர் சுந்தரம், திகில், ஜிந்தா, ஆட்கள் தேவை, மாமாகிகி, யாதுமாகி நின்றாய், ஹவாலா, தௌலத், மதம் உள்பட 18 படங்கள் வரை ஓடிடியில் வெளியாகும் நிலை உருவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்