’தலைவர் 168’ படத்தில் இணைந்த ‘படையப்பா’ நடிகர்!

திங்கள், 9 டிசம்பர் 2019 (20:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார் என்ற செய்தியை சற்று முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் இதே படத்தில் இன்னொரு பிரபல நடிகரும், ரஜினியுடன் ’படையப்பா’ படத்தில் நடித்தவருமான ஒரு நடிகர் இணைந்துள்ள செய்தி தற்போது வெளிவந்துள்ளது 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தில் டி இமான் இசையமைக்க உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடிக்க உள்ளதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவித்த நிலையில், சற்று முன் கிடைத்த தகவலின்படி இந்த படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார். 
 
ரஜினிகாந்த் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகிய இருவரும் ’படையப்பா’ படத்தில் மட்டுமே இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது என்றும் இந்த படம் 2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
மேலும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் இன்னும் ஓரிரு நாளில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்