அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் சூப்பர் ஹிட் நடிகை!

செவ்வாய், 31 மார்ச் 2020 (11:07 IST)
இயக்குனர் ஹரி – நடிகர் சூர்யா கூட்டணியில் இதற்கு முன்னால் ஆறு, வேல், சிங்கம் மற்றும் அதன் பிற பாகங்கள் ஆகியவை வெளியாகின. இந்த படங்கள் மக்களிடையே பரவலாக வரவேற்பை பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது ஆறாவது முறையாக ஹரி – சூர்யா கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.

ஹரியின் 16வது படமான இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக சூர்யா படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க இருக்கிறார். இமான் ஹரி படங்களுக்கும் இதுவரை இசையமைத்தது கிடையாது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கி ஒரே கட்டமாக நடந்து முடிய இருந்தது. ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவால் தள்ளிப்போயுள்ளது.


இந்நிலையயில் தற்போது இப்படத்தின் சமீபத்திய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. இவர் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகியாக சிறந்து விளங்கி வருகிறார். கடைசியாக இவர்  நடித்த "Ala Vaikunthapurramuloo" என்ற தெலுங்கு படம் தென்னிந்திய சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்