பொன்னியின் செல்வன் ‘சோழா சோழா’ பாடல் ரிலீஸ்!

வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (18:12 IST)
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்ற  ‘சோழா சோழா’ என்ற பாடல் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இந்த படத்தில் இடம் பெற்ற பொன்னி நதி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது படம் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமானின் இசையில் உருவான இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் என்பவர் எழுதியுள்ளார். இந்த பாடலும் இந்த பாடல் காட்சிகளும் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் இந்த படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்