இணையத்தை கலக்கும் "பட்டாஸ்" பட ஜுக் பாக்ஸ்- கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்!

சனி, 28 டிசம்பர் 2019 (18:06 IST)
தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட கேப் விடமால் அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் அசாத்திய வெற்றிக்கு பிறகு தற்போது "பட்டாஸ் " படத்தில் நடித்து வருகிறார். செந்தில்குமார் இயக்கும் இயக்கம் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
 
தனுஷுக்கு ஜோடியாக சினேகா,மெஹரீன் பிர்சாடா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இளமையான தோற்றத்தில் துரு துறுவென இப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இரட்டை இளம் இசையமைப்பாளர்களான விவேக் மெர்வின் இசையமைக்கின்றனர்.
 
வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்தின் ஜுக் பாக்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. இதில் புது சூரியன், சில் ப்ரோ, ஜிகிடி கில்லாடி, பிரியாத என்ன, தாயின் அன்பு, முரட்டு தமிழன் டா என மொத்தம் ஆறு பாடல்கள் வெளியாகி பட்டாயா கிளப்பி வருகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்