ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் சிவகார்த்திகேயன்

திங்கள், 25 செப்டம்பர் 2023 (14:19 IST)
இன்று இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், அவருடன் தனது 23 வது படத்தில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, ஸ்பைடர், கத்தி, சர்க்கார் உள்ளிட்ட பல படங்கள் இயக்கியுள்ளார்.

இவர்  நடிகர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கவிருந்த  நிலையில் அப்படம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, அவர்,  நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இதை இன்று நடிகர் சிவகார்த்திகேயன் உறுதி செய்துள்ளார். இன்று  இயக்குனர் முருகதாஸு ன் பிறந்த நாளையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதில், என் 23 வது படத்திற்காக உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி,  உங்களின் கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தேன். இப்படம் எனக்கு சிறப்பானதாக இருக்கும். இப்பட ஷூட்டிங்கிற்காக காத்திருக்க முடியாது சார்..…  இன்னொருமுறை உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’’  என்று தெரிவித்துள்ளார்.

Dear @ARMurugadoss sir,

Wishing you a very happy birthday sir

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்