மேலும், தற்கொலை குறித்து 20,21 வயதில் இருக்கும்போது நானும் யோசித்திருக்கிறேன். கலை உலகம் என்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் யோசித்திருக்கிறேன். வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஒருபோதும் அவசரப்படக்கூடாது; வாழ்க்கையின் ஒரு அங்கம். அது வரும்போது வரட்டும். நீங்களாகவே தேட வேண்டாம் என்று தெரிவித்தார்.