பெரும் விருந்து படைக்க காத்திருக்கிறேன்: சூர்யா பட தயாரிப்பாளர் டுவிட்!

வியாழன், 18 அக்டோபர் 2018 (11:00 IST)
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா  நடித்து வரும் ‘என்.ஜி.கே’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது..
படப்பிடிப்புக்கு இடையே, செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால். ‘என்.ஜி.கே’ படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை. இதற்கிடையே, கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதில் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். 
இதனால், மீண்டும் ‘என்.ஜி.கே’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்தது. 
 
இதற்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் “'சூர்யா 37' படத்தின் லுக்கிலிருந்து சூர்யா மீண்டு வர ’என்.ஜி.கே’ குழு காத்திருக்கிறது. நவம்பரில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பின்னர் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் பகிரப்படும். உங்கள் அனைவருக்கும் ஒரு பெரும் விருந்து படைக்க காத்திருக்கிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்