துரதிர்ஷ்டவசமாக இரண்டாவதுதான் நடந்திருக்கிறது. படத்துக்கு ஓரளவு ஓபனிங் இருந்தாலும் வார நாள்களில் திரையரங்குகளில் கூட்டமில்லை. ஆனால், இயக்குனர் ராம்நாத், திருநாள் பார்க்க மக்கள் திருவிழா போல கூடுகிறார்கள் என்று பேட்டி அளித்து வருகிறார். ஆனால், படம் பார்த்த ரசிகர்களோ, திருநாள் என்று கூறி எங்கள் நாளை கரிநாளாக்கிட்டாரே இயக்குனர் என்று குமுறுகின்றனர். சிட்டியில்தான் சுமார், பி, சி சென்டர்களில் படம் நன்றாகப் போகிறது என்கிறது இயக்குனர் தரப்பு.