கடந்த காலம் எப்போதும் உறங்காது… தொடங்கியது ‘த்ருஷ்யம் 3’ படம்!

vinoth

சனி, 22 பிப்ரவரி 2025 (08:23 IST)
2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகம் மோகன்லால் நடிக்க ஜீத்து ஜோசப்பே இயக்கி நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து மூன்றாம் பாகம் எப்போது உருவாகும் என்ற கேள்விகள் எழுந்தன.

இது குறித்து ஜீத்து ஜோசப் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘திருஷ்யம் மூன்றாம் பாகத்துக்கான க்ளைமேக்ஸ் தயாராகி விட்டது. அது மோகன்லாலுக்கும் பிடித்து விட்டது.’ எனக் கூறியிருந்தார். ஐந்து ஆண்டுகளாகத் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்