கார்த்தியின் மெய்யழகன் ஓடிடி ரிலீஸ் எப்போது?

vinoth

ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (14:12 IST)
கார்த்தி மற்றும் அரவிந்த்சுவாமி நடிப்பில் இயக்குனர் பிரேம்குமார் இயக்கியுள்ள மெய்யழகன் செப்டம்பர் 27 ஆம் தேது உலகம் முழுவதும் ரிலீஸானது. ரிலீஸுக்கு முன்பே இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனால் படத்தின் மீதான விமர்சனமாக வைக்கப்பட்டது படத்தின் நீளமும், இரண்டாம் பாதி கதையை விட்டு விலகி செல்வதும்தான். அதையடுத்து படத்தின் நீளம் 18 நிமிடம் அளவுக்குக் குறைக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் படத்துக்கு பெரியளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மெய்யழகன் திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்