லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்டிரியா, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் மீது விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் இந்த படம் பொங்கலுக்கு மிகப் பிரம்மாண்டமாக ரிலிஸாக உள்ளது.
இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் சென்சார் நடைபெற்றது. அதில் படத்துக்கு யூ ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. படத்தில் மொத்தம் 9 இடங்களில் கட் சொன்ன சென்ஸார் அந்த காட்சிகளை நீக்குவதற்கு ஒப்புக்கொண்டால் யு சான்றிதழ் தருவதாக சொல்லியுள்ளனராம். அது சம்மந்தமாக படக்குழு எடுக்கும் முடிவை பொறுத்தே யு சான்றிதழ் கிடைக்குமா அல்லது யு ஏ சான்றிதழோடே ரிலிஸாகுமா என்பது தெரிய வருமாம்.