ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா: மீண்டும் விமானம், ரயில்களுக்கு தடையா?

திங்கள், 21 டிசம்பர் 2020 (07:43 IST)
உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்து வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் விமானம் உள்ளிட்ட போக்குவரத்து முடக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக போக்குவரத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தற்போது ஓரளவுக்கு ரயில்கள் பேருந்துகள் விமானங்கள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டு வருவதை அடுத்து மீண்டும் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து முடங்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது
 
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் விமான பயணத்திற்கு மீண்டும் தடை செய்யப்படும் சூழ்நிலை உருவாகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் சொந்த நாட்டிற்கும், சொந்த நகரங்களுக்கு செல்ல இங்கிலாந்து விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதாக செய்திகள் வெளிவந்திருக்கிறது 
 
இங்கிலாந்து நாட்டில் இருந்து ரயில்கள் மற்றும் விமானங்கள் வருவதை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக தனது எல்லையை மூடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் நெதர்லாந்து இத்தாலி போன்ற நாடுகளில் வசிக்கும் இங்கிலாந்து நாட்டினர், உடனடியாக தங்கள் நாட்டிற்கு திரும்ப முயற்சித்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்