மாஸ்டரால் வந்த ஹீரோ வாய்ப்பு… மகேந்திரன் ஹேப்பி!

திங்கள், 26 ஜூலை 2021 (15:40 IST)
நடிகர் மகேந்திரன் இப்போது அமிகோ கேரேஜ் என்ற ஹேங்ஸ்டர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் சாதனை படைத்த குழந்தை நட்சத்திரமாக இருந்தவர் மாஸ்டர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாகவே ரஜினி, கமல்,  விஜய்காந்த், அஜித் மற்றும் விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடித்து 100 படங்களை தாண்டி நடித்தார். ஆனால் வளர்ந்து அவர் கதாநாயகனாக நடிக்க முடிவு செய்த போது அவருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இப்போது மாஸ்டர் படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அவர் நடித்தது ரசிகர்களைக் கவர்ந்தது. அதனால் இப்போது அவருக்கான வாய்ப்புகள் அதிகளவில் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அமிகோ கேரேஜ் என்ற ஹேங்ஸ்டர் படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு கேரேஜை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாம். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்