போர்னோகிராபி படங்களில் நடித்து பிரபலமானவர் மியா கலிஃபாa. அந்த துறையில் ஈடுபட்டு இருக்கும் ஒரே இஸ்லாமிய பெண் அவர் என்பதால் அடிப்படைவாதிகளிடம் இருந்து அவருக்கு மிரட்டல்கள் வந்தன. ஆனால் ஒரு கட்டத்தில் அவர் அந்த துறையில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும் அந்த துறையில் தான் பெரிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்கை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இப்போது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்து அதற்காக விண்ணப்பித்து உள்ளனர். விவாகரத்து சம்மந்தமாக பேசியுள்ள மியா கடந்த ஒரு ஆண்டாக நாங்கள் இருவரும் இந்த உறவைத் தக்க வைக்க செய்த முயற்சிகள் பலனளிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.