"மாஸ்டர்" பட ஜுக்பாக்ஸ் ரிலீஸ்? சூப்பர் ட்ரெண்டாகும் வெயிட்டான தகவல்!

திங்கள், 27 ஜனவரி 2020 (18:58 IST)
பிகில் பபடத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. விஜய்யின் 64-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
 
இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. வரும் ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படத்தைத் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. நேற்று விஜய் - விஜய் சேதுபதி மோதிக்கொள்ளும் இப்படத்தின்  மூன்றாம் லுக் போஸ்டர் வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்டானது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் இவை தான் என மொத்த பாடல்களும் அடங்கிய ஜுக்பாக்ஸ் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. ஆனால், இது போலியான லிஸ்ட் என்றும் விரைவில் மாஸ்டர் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்