நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் "மறுவார்த்தை" ப்ரோமோ வீடியோ!

திங்கள், 25 நவம்பர் 2019 (18:10 IST)
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதத்தின் இறுதியில், வரும் 29 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
தனுஷ்  மற்றும் மேகா ஆகாஷ் நடித்துள்ள இப்படத்திற்கு டர்புகா சிவா இசையமைத்துள்ளார். எஸ்கேஎப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பாக மதன் தயாரிக்கும் இப்படதில் சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒன்று இணையத்தில் வெளிவந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. "மறுவார்த்தை" என்ற இந்த பாலின் ப்ரோமோ வீடியோ இன்று யூடியூபில் நம்பர் ஒன ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்