இந்த வருடம் , 2024ல் திரையரங்க வெளியீட்டிற்குப் பிறகு, 12 தெலுங்கு படங்கள் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக இருக்கிறது.
இந்தத் திரைப்படங்கள் திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனால் ரசிகர்கள் திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்தப் பின்னர், தங்களுக்குப் பிடித்த நடிகர்களின் நடிப்பின் மாயாஜாலத்தை தங்களின் வீடுகளில் வசதியாகப் பார்க்கலாம்.
நெட்ஃபிக்ஸ் தங்களின் சமூக ஊடக தளங்களில் இந்த 12 தலைப்புகளின் ஸ்னீக் பீக் மூலம் உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 2023ல் 'போலா ஷங்கர்', 'தசரா', 'ப்ரோ', 'மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பாலிஷெட்டி', 'மேட்' மற்றும் 'குஷி' போன்ற படங்களைப் பார்த்து ரசித்தனர். இப்போது நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியாக இருக்கும் படங்களுக்காக காத்திருக்கும் உலகெங்கிலும் உள்ள தெலுங்கு சினிமா ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இப்போது இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் விபி, மோனிகா ஷெர்கில் இதுகுறித்து பகிர்ந்துகொண்டது “நெட்ஃபிலிக்ஸின் தென்னிந்திய பிராந்தியத்தைப் பொருத்தமட்டில் 50% ஆண்டு வளர்ச்சி தெலுங்கு திரைப்படங்களை வைத்துதான் இருக்கிறது.