பிக்பாஸ் மஹத்திற்கு காதலியுடன் நாளை கல்யாணம் - அவரே வெளியிட்ட ரொமான்டிக் ஸ்டில்ஸ்!

புதன், 29 ஜனவரி 2020 (15:53 IST)
நடிகர் மஹத் அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா திரைப்படத்தின் மூலம் பரீச்சியமான நடிகராக பார்க்கப்பட்டார். அதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய அளவில் பிரபலமானார். கூடவே நிறைய சர்ச்சைகளிலும் சிக்கினார். மேலும் அடிக்கடி யாஷிகாவுடன் சேர்ந்து அட்டகாசம் செய்து கெட்ட பெயர் வாங்கினார். 
 
இதனால் அந்த நிகழ்ச்சியில் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால், அவருக்கு வெளியில்  பிராச்சி மிஸ்ரா என்ற காதலி இருந்தார். யாஷிகா விஷயத்தால் இவர்கள் காதலில் சற்று விரிசல் ஏற்பட்டு பின்னர் மீண்டும் சேர்ந்தனர். அதையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் அண்மையில் இவர்களுக்கு நிச்சயத்தார்த்தம் நடைபெற்றது.    
 
இந்நிலையில் நாளை இந்த காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. இது குறித்து மஹத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " நம் திருமணத்திற்கும் இன்னும் ஒரே ஒரு நாள் தான் இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கும் போது  நான் பாக்கியசாலியாக உணர்கிறேன். நீ என் வாழ்க்கையில் வந்து எல்லாவற்றையும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கிறாய். மோசமான நாட்களில் இருந்து நாம் நிறைய பாடம் கற்றுக் கொண்டோம், நல்லவற்றைக் கொண்டாடினோம். மற்றும் மிக முக்கியமாக, ஒவ்வொரு சண்டையிலும்  ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்துகொண்டோம். Thank you. I love you. Thank you FOR BEING YOU ❤️ @mishraprachi

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்