இந்த நிலையில் மாநகரம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில்தான் பங்கேற்பதாக விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்ததோடு இந்த படத்தின் டைட்டில் மும்பைகார் என்றும் அறிவித்துள்ளார்
மாநகரம் படத்தில் சந்தீப்கிஷான் நடித்த கேரக்டரில் தான் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாகவும், ஸ்ரீ கேரக்டரில் விக்ராந்த் மாஸ்ஸே நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது