எனவே இப்படத்தின் முக்கிய அப்டேட்டை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையொட்டி, லால் சலாம் பட டிரைலர் வரும் நவம்பர் 12 ஆம் தேதி காலை 10;45 க்கு வெளியாகும் என அறிவித்துள்ளது.
அதேபோல் இப்படம் ஏற்கனவே அறிவித்தபடி வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.