மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இந்நிலையில் இந்த படம் இப்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
அதுபோலவே இந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது, ஆனால் படமாக இல்லை. வெப் சீரிஸாக. இந்த வெப் சீரிஸை 8 பாகங்களாக பிருத்விராஜே இயக்க உள்ளாராம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.