வீட்டில் தவறி விழுந்த பிரகாஷ் ராஜ்… சிகிச்சைக்காக ஐதராபாத் பயணம்!

செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (17:18 IST)
நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் தங்கி இருந்தார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய மொழிகளில் மறுபடியும் பிஸியான நடிகராக வலம் வர ஆரம்பித்துள்ளார். இப்போது தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை கோவளத்தில் தங்கி இருந்தார். அப்போது அவர் வீட்டில் தவறி விழுந்ததில் தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஐதராபாத் சென்றுள்ளார். இதை அவரே தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்