இந்நிலையில் அவர் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியை மணந்து குடும்ப வாழ்க்கையில் பிஸியானார். அதன் பின்னர் இப்போது நீண்ட இடைவெளிக்குப் பின் இப்போது அவர் தமயந்தி என்ற த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 3 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இறுதிக் கட்ட பணிகளில் இருக்கும் இந்தப் படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.