விஜய் சேதுபதி, விமல், குரு சோமசுந்தரம் மற்றும் விதரர்த் போன்ற பல சினிமாக் கலைஞர்கள் உருவாகக் காரணமாக இருந்த கூத்துப்பட்டறை என்ற நாடக அமைப்பைத் தோற்றுவித்த நாடகநடிகர் மற்றும் இயக்குனர் ந முத்துசாமி அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
தமிழ் நாடகத்துறையின் முதல் நவீன நாடகம் என சொல்லப்படும் ’காலம் காலமாக’ என்ற நாடகத்தை எழுதி இயக்கியதன் மூலம் நாடகத்துறையில் புகழ் பெற்றார். தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகத்துறையில் இயங்கியுள்ள முத்துசாமி நாடகத்துறையின் உயரிய விருதான சங்கீத நாடக அகாடமி விருதை 1999-ல் பெற்றுள்ளார். இந்திய அரசின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2012-ல் பெற்றுள்ளார்.