இதற்கு அடுத்ததாக தளபதி 66 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் தயாரிக்கிறார். இப்படியான நேரத்தில் அதற்கு அடுத்த படமான தளபதி 67 படத்தை குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது கார்த்தி, நாகார்ஜுனா நடித்து வெளியாக தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிபல்லி விஜய்யை இயக்கப்போவதாகவும் தில் ராஜு தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் அதில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறாராம். உடல் எடை குறைத்து மார்க்கெட் இழந்த கீர்த்தியை தளபதி 67 தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்க முடிகிறது.