கீர்த்தி சுரேஷின் புதிய பாதை...ரசிகர்கள் வருத்தம்?

திங்கள், 17 மே 2021 (23:07 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் கர்ச்சிக்கு மாறிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகிறது.

ரஜினிமுருகன், பைரவா, சாமி2, போன்ற படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் அடுத்து, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகிவரும் ’’சர்காரு வாரி பாட்டா’என்ற பிரமாண்ட ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் எப்போது ரிலீஸாகும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கு நிலையில் இன்று இப்படத்தைக் குறித்த முக்கிய அறிவிப்பை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது.

அதில்,’ சர்காரு வாரி பாட்டா’படம் அடுத்தாண்டு(2022) சங்கராந்தி அன்று  தியேட்டரில் ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங்கிற்கான வேலைகள் நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துவருகிறார். இதில் இருவருக்குமான கேரக்டர்கள் பற்றிய தகவல் கசிந்துள்ளது.

பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வங்கி மோசடியைப் பின்னணியாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மகேஷ் பாபு வங்கி மேலாளராகவும், அவரது உதவியாளராக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. தமன் இசையமைத்துவரும் இப்படத்தை மைதிரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் கவர்ச்சிப் பாதைக்கு மாறிவிட்டதாகவும் அவரது ராங் தி போன்ற தெலுங்குப் படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளதாகவும் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்