கவின் நடிக்கும் ‘பிளடி பெக்கர்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?... படக்குழு அறிவிப்பு!

vinoth

வியாழன், 17 அக்டோபர் 2024 (07:26 IST)
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனராக உருவாகியுள்ள நெல்சன் சமீபத்தில் ஒரு திரைப்பட நிறுவனத்தை தொடங்கிய அதன் முதல் படமாக கவின் நடிப்பில் பிளடி பெக்கர் என்ற படத்தைத் தயாரித்துள்ளார். இது ஒரு பிச்சைக்கார இளைஞனைப் பற்றிய படம் என்று தெரிகிறது.

சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், ஜென் மார்ட்டின் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் டிரைலர் நாளை (அக்டோபர் 19 ) தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்