கழட்டிவிட்ட விஷால்... கைகொடுத்த கார்த்தி

திங்கள், 6 நவம்பர் 2017 (14:30 IST)
விஷாலுக்கு ஜோடியாக நடிக்க இருந்த சயிஷா, தற்போது கார்த்தி ஜோடியாக நடிக்க இருக்கிறார்.


 

ஜெயம் ரவி ஜோடியாக ‘வனமகன்’ படத்தில் அறிமுகமானவர் சயிஷா. அடுத்ததாக, கார்த்தி மற்றும் விஷால் நடிப்பதாக இருந்த ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் கமிட்டானார். இந்தப் படத்தை பிரபுதேவா இயக்குவதாக இருந்தது. ஆனால், என்ன காரணத்திலோ அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது விஜய் சேதுபதி ஜோடியாக ‘ஜுங்கா’ படத்தில் நடித்து வருகிறார் சயிஷா. பாரீஸில் நடைபெறும் இந்தக் கதையில், அங்கேயே பிறந்து வளர்ந்த பெண்ணாக நடிக்கிறார் சயிஷா. கோகுல் இயக்கிவரும் இந்தப் படத்தில், இன்னொரு ஹீரோயினாக பிரியா பவானிசங்கர் நடிக்கிறார்.

இந்நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சயிஷா. இந்தப் படத்தை, சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்