குலை நடுங்க வைக்கும் "காஞ்சனா 3" புகைப்படங்கள்!

செவ்வாய், 2 ஏப்ரல் 2019 (13:55 IST)
ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் 'காஞ்சனா' "காஞ்சனா 2"என்ற பெயரில் வெளிவந்தது.
 
இதன் அனைத்துப் பாகங்களிலும் ஹீரோவாக லாரன்ஸே நடித்திருந்தார். வெளிவந்த இரண்டு பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் வாரி குவித்தன.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரிக்க  படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 

 
இப்படத்தில்  நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் எப்போதும் போலவே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


 
இந்தப் படம் ஏப்ரல் 19-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்