"காஞ்சனா 3" ரிலீஸ் குறித்த ஸ்பெஷல் அப்டேட்ஸ் இதோ ..!
சனி, 19 ஜனவரி 2019 (17:55 IST)
‘காஞ்சனா 3’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் திறமையாலும், கடின உழைப்பாலும் முன்னுக்கு வந்த நடிகர்களுள் ஒருவர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக திரை பயணத்தை துவங்கிய அவர் பிறகு டான்ஸ் மாஸ்டராக, நடிகராக, இயக்குனராக அதை தாண்டி சிறந்த மனிதராக விளங்குபவர் ராகவா லாரன்ஸ்.
திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான படம் காஞ்சனா. முதலில் முனி என வெளிவந்த இப்படம் காஞ்சனா என்ற பெயரில் தொடர்ந்து 2 பாகங்களை வெளியிட்டது. ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. முனி 4 ஆன காஞ்சனா மூன்றாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'முனி'. இதன் இரண்டாம் பாகம் 'காஞ்சனா' என்ற பெயரில் வெளிவந்து அதுவும் அபார சாதனையை படைத்தது.
தற்போது இந்தப் படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா , தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
மோஷன் போஸ்டருக்கென தனி வரவேற்பு உள்ள நிலையில், இப்படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டரை பொங்கல் தினத்தன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் லாரன்ஸ் ரசிகர்கள்.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் , 2019 ஏப்ரல் 18-ம் தேதி இப்படத்தை திரைக்கு வருகிறது என தெலுங்கில் வெளிவந்த போஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது.