சென்சார் ஆனதா கமலின் ‘விக்ரம்’ டீசர்… தீயாய்ப் பரவும் தகவல்!

திங்கள், 18 ஏப்ரல் 2022 (13:47 IST)
கமல் நடிப்பில் நான்காண்டு காலமாக எந்த படமும் ரிலீஸ் ஆகாத நிலையில் இப்போது விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது.

கமல்ஹாசன் விஜய் சேதுபதி பகத் பாசில் உள்பட பலர் நடித்த விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஜுன் மாதம் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்துக்கும் அனிருத் இசையமைத்துள்ளார். கமல் நடிப்பில் நான்காண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படமாக விக்ரம் உருவாகி வருகிறது.

விக்ரம் திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவரின் கதாபாத்திரங்களைப் பற்றிய அறிமுகமாக ஒரு புதிய வீடியோவை இணையத்தில் வெளியிட, அது இப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் விரைவில் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் புதிய டீசர் ஒன்று சென்ஸார் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த டீசருக்கு UA சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஐந்து மொழிகளில் இந்த படத்தின் வெளியீடு இருக்கும் என அறிவித்த நிலையில் ஐந்து மொழிகளில் டீசரையும் சென்ஸார் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்