விக்ரம் பிறந்த நாளில் ‘கோப்ரா’ படத்தின் மாஸ் அப்டேட்!

ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (13:46 IST)
நடிகர் விக்ரம் என்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘கோப்ரா’ படத்தின் மாஸ் அப்டேட் இன்று வெளிவந்துள்ளது. 
 
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’ . இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஆதிரா என்ற பாடல் வரும் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்