இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்த நிலையில் கமல் தேர்தலுக்கு முன்னர் இந்த படத்தில் நடித்து முடிப்பதாக இருந்தார். ஆனால் இப்போது கமலிடம் இருந்து எந்த அழைப்பும் லோகேஷுக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் கமல் தேர்தல் முடிந்து படத்தைத் தொடங்கலாம் என சொல்லிவிட்டால் அந்த இடைவெளியில் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை எடுக்கும் முனைப்பில் இருப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால் அந்த தகவல் உண்மை இல்லையாம். சென்னையில் சில நாட்களுக்கு முன்னதாக இந்த படத்துக்கான டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மார்ச் மாதத்தில் இருந்து இந்த படத்துக்கான ஷூட்டிங் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கமல் தேர்தல் பிரச்சாரங்களிலும் படப்பிடிப்பிலும் மாறி மாறி கலந்துகொள்வார் என சொல்லப்படுகிறது.