கமல்ஹாசன் கட்சியில் பெண்களுக்காக புதிய பிரிவு தொடக்கம்!!
சனி, 5 டிசம்பர் 2020 (21:33 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அடுத்தவருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.
இந்நிலையில், இன்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் மய்யம் மாதர்;; என்ற புதிய பிரிவைத் தொடங்கியுள்ளார் அவர்.
இதுகுறித்து அக்கட்சியின் மகளிர் அணியின் மண்டல துணைச் செயலாளர் சினேகா மோகன் தாஸ் கண்காணிப்பில் மய்யம் மாதர் படை செயல்படும் என வும் இதில், தமிழகத்தில் சீரமைப்பதில் ஆர்வமுள்ள பெண்கள் இணைந்து செயல்படலாம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன தெரிவித்துள்ளார்.