’’நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்’’ - கமல்ஹாசன் டுவீட்

வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:26 IST)
நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டு வந்த அரசு மருத்துவக் கல்லூரி கான்கிரிட் தளம் இன்று அதிகாலையில் இடிந்து விழுந்தது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும் போதே உடைந்தது போகிருக்கிறது.நினைவிருக்கட்டும்...  நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்.  நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா.  மக்கள் நீதி மலர…  தக்க தருணம் இதுவே.நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து விழுந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது.  சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ளார்

நாமக்கல் மருத்துவக் கல்லூரி, கட்டும் போதே இடிந்து விழுந்திருக்கிறது.

மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது.

சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம்.(1/2)

— Kamal Haasan (@ikamalhaasan) October 30, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்