தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் தயாரித்து நடித்த, விக்ரம் படத்தை லோகேஷ் இயக்கியிருந்தார்.
சமீபத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, ரூ.200 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ள நிலையில், இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.70 லட்சம் மதிப்புள்ள லெக்சஸ் கார் ஒன்றைப் பரிசாஅக வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா இப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. ஆனால், சமீபத்தில் தன் டுவிட்டர் பக்கத்தில், என் குருவுடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை நிறைவேறிவிட்டது என்று பதிவிட்டிருனந்தார்.
இன்று, நடிகர் கமல்ஹாசன், விலை உயர்ந்த ரோலக்ஸ் வாட்ஸை நடிகர் சூர்யாவுக்குப் பரிசாக வழங்கினார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.